மு.க.ஸ்டாலின் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம்

அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
P. Shanmugam
Published on: 

தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்து பேசியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உருவத்தை வைத்து பேசிய மு.க ஸ்டாலின்

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை "பெட்டி பாமா, பல்டி பாமா என அழைக்கின்றனர்,எப்படி தான் அந்த உருவத்தை வைத்து பல்டி அடித்தார்கள் என்று தெரியவில்லை" என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் உருவத்தை வைத்து பேசியதற்காக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், அமைச்சர் வன்னி அரசு மற்றும் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் முதலமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பெ.சண்முகம் உருவகேலி செய்லில் யார்ர் ஈடுப்பாட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வந்திருக்கிறது என்று கண்டனங்களை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவரின் சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது

மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாராபுரம் வேட்பாளர் குறித்து சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர் வகித்த, வகிக்கும் பொறுப்புக்கு உகந்த செயல் அல்ல என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.

என்று தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com