

சென்னை:
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்! என்று கூறியுள்ளார்.