

நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்! என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளாகும். வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்குப் புகழ்வணக்கம்!
* சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்!
* உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்!
* செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்!
* சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்!
நமது திராவிட மாடல் அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.