விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.
விளையாட்டு மேம்பாட்டுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com