மதுராந்தகத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நாளையுடன் 2 தொகுதிகளிலும் பிரசாரம் முடிவடைகிறது.
MK Stalin
Published on: 

இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதையொட்டி இந்த வாரத்தில், கட்சிகளின் தலைவர்கள், 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இதில், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் ' நேற்று வரை தீவிரமாக நடைபெற்றது.

வரும் செவ்வாய்க்கிழமை (6-ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், நாளையுடன் 2 தொகுதிகளிலும் பிரசாரம் முடிவடைகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com