

தமிழக சட்டசபையில் இன்றைய மானியக் கோரிக்கையின்போது மலைவாழ் மக்கள் குறித்த விவாதம் எழுந்தது. அப்போது முன்னாள் அமைச்சரும், திமுக கொறடாவும் ஆன எ.வ. வேலு பேசும்போது "மலைவாழ் பகுதி என்பது நீண்ட நெடிய ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. அதன்பின் அரசு வந்தபோதுதான் அப்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சமுனாமரத்தூர் என்ற மலை உள்ளது. அங்கு 200 கிராமங்கள் உள்ளன. கல்வராயன் மலையிலும் அதுபோன்ற எண்ணிக்கையில் கிராமங்கள் உள்ளன. சில நேரங்களில் போக்குவரத்திற்குக் கூட வசதி இல்லை. ஒத்தையடி பாதை கூட இல்லாத ஏராளமான கிராமங்கள் உண்டு.
அந்தந்த ஆட்சிகள் வந்தபோதுதான் பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இவர்கள் சொல்கிற பகுதி முழுமை அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. அங்கு காலம் காலமாக இருந்தார்கள். உழுதார்கள். ஆனால் நிலம் அவர்களுக்கு சொந்தம் கிடையாது. இப்படிப்பட்ட நிலைதான்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக தொடங்கப்பட்டபோது, நான் நேரடியாக சென்று 13 ஆயிரம் பேருக்கு நில உரிமை பட்டா கொடுத்திருக்கிறேன். அதனால் முழுமை அடைந்ததாக அர்த்தம் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொன்று செய்ய வேண்டியுள்ளது. நாங்களும் ஜாதி சான்றிதழ் கொடுத்திருக்கிறோம். நாங்கள் கொடுத்தோம். தேவை இருக்கிறது. நீங்களும் முடிக்க முடியாது. மலைப்பகுதியில் அவ்வளவு கிராமங்கள் இருக்கிறது. திமுக ஆட்சியில் முடிந்த அளவிற்கு சொய்திருக்கிறோம். அதிகம் செய்த ஆட்சி திமுக ஆட்சிதான்" என்றார்.
அதன்பின் "மலைாவாழ் மக்கள் எண்ணிக்கை சுமார் 8 லட்சம் பேர்தான். 5 வருடத்திற்குள் கொடுக்க முடியும். திரும்ப திரும்ப சொல்கிறேன். நான் குறைகளை சொல்லவில்லை. போதாமைகளை சொல்கிறேன்" என்று அமைச்சர் வன்னி அரசு பேசினார்.
பின்னர் அதிமுக உறுப்பினர் எழுந்து "2011 முதல் 2016 வரை அதிமுக அமைச்சர் காலடி படாத இடமே மலையில் கிடையாது. மலைக்கு தேவையான அனைத்தையும் அதிமுக செய்து கொடுத்தது. இந்த அளவிற்காவது இருப்பதற்கு அம்மாவின் அதிமுகதான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பீல்டிங்கிலும் அம்மா பெயரும், அதிமுக முன்னாள் அமைச்சர் மோகன் பெயரும் இருந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
உடனே வன்னி அரசு "செய்தியை திரித்தி திருப்பு வாதம் செய்ய முயற்சி செய்கிறார்கள். கீழ் தீவனூர், மேல் தீவனூரில் இப்போதும் நீங்கள் சென்று பார்க்கலாம்., 10 கி.மீ. சாலைகள் இல்லை. நாங்கள் நடந்து சென்றோம். ஆட்சியர் உள்ளிட்டோர் வந்தார்கள். இன்றும் சாலை இல்லாத கிராமம் இருக்கு.
இப்படிப்பட்ட ஒரு கிராமத்தைதான் நீங்கள் தத்தெடுத்திருக்கீங்க, நீங்கள் வேலை பார்த்திருக்கீங்க, அப்படின்னா, என்ன லட்சணத்தில் இருக்குன்னு இந்த இடத்தில் நான் சொல்கிறேன். நான் வெளிப்படையாக பேசுகிறேன். நாங்கள் செய்தோம், நீங்கள் செய்தோம் என்பதல்ல, தேவைப் பற்றி சொல்கிறோம். கோரிக்கைகள் பற்றி சொல்கிறோம். மக்கள் வலியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். வலியை பற்றி பேசாமல், செய்தோம் என்று சொன்னால், சாவல் விடுகிறேன். நீங்க வாங்க, மேல் தூவனூர், கீழ் தூவனூரில் சாலை இல்லை. நாங்கள் போட சொல்லியிருக்கிறோம். தொடங்கியிருக்கிறோம்." என்றார்.