

ஜெம் வீரமணி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுகவினர் 8 பேர் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகின்றனர் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஒரு தவறை மறைப்பதற்காக ஓவர் ரியாக்ட் செய்கிறது திமுக.
* தவறுகளை மறைக்கப் பார்க்கிறது திமுக.
* பாலியல் வீடியோ சரியாக இல்லை என்று எப்படி கூறுகிறார் ரகுபதி?
* வீரமணி தொடர்பான வீடியோவை யார் பார்த்தது? அப்போதைய அமைச்சர் பார்த்தாரா? இல்லை அதிகாரிகள் பார்த்தனரா?
* வீடியோ ஷேடோவாக இருந்தது என ரகுபதி கூறினார், அவர் பார்த்தாரா? அல்லது பார்த்தவர்கள் கூறினார்களா?
* வீரமணி விவகாரத்தில் கோர்ட்டில் மேலும் 2 மாதம் அவகாசம் வேண்டும் என திமுக அரசு கேட்டிருக்க வேண்டும்.
* ஜெம் வீரமணி பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக திமுகவினர் 8 பேர் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகின்றனர்.
* திமுக ஆட்சியில் பெரிய பவர் சென்டராக இருந்தவரை அணுகி தான் ஜெம் வீரமணி தப்பி உள்ளார்.
* ஜெம் வீரமணியை காப்பாற்றவே திமுக துடிக்கிறது.
* தொழிலதிபர் ஜெம் வீரமணி அணுகிய திமுக பவர் சென்டர் யார்?
* ஞானசேகரன் விவகாரத்தில் போராட்டம் நடத்திய பின்னர் தான் திமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
* அனைவரும் போராடிய பின்னர் தான் அண்ணா பல்கலை. விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* அண்ணா பல்கலை. விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி விவரத்தை வெளியிட்டவர்கள் திமுக ஆட்சியினர்.
* மாணவியை அசிங்கப்படுத்தவும் மிரட்டவும் தான் அவர் குறித்த விவரத்தை திமுக வெளிவிட்டது.
* வீரமணி வழக்கில் ஒரு குற்றவாளியை கூட தப்பிக்க விட மாட்டோம்.
* திமுகவை போன்ற கேடுகெட்ட கட்சி தான் இத்தகைய குற்றச்சாட்டில் இருந்து குற்றவாளியை தப்பவிடும்.
* ஜெம் கிரானைட் வீரமணியை போன்று மேலும் எத்தனை வழக்குகளை திமுக ஆட்சி மூடி மறைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.