தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ பயண சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது.
chennai metro train
Published on: 

தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ பயண சேவை நேரமானது நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு (08.11.2026), சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 05.11.2026 மற்றும் 06.11.2026 ஆகிய தேதிகளில் கூடுதல் சேவைகளை இயக்கவுள்ளது.

இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak hour) மெட்ரோ இரயில் சேவைகள் வழக்கமான இரவு 8:00 மணிக்குப் பதிலாக, இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.

நவம்பர் 6, 2026 (வெள்ளிக்கிழமை -நாளை):

பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் வழித்தடத்தில் மாலை நெரிசல் மிகுந்த நேரங்களுக்கான (Peak-hour)

மெட்ரோ இரயில் சேலைகள் வழக்கமான மாலை 5:00 மணிக்கு பதிலாக, மாலை 4:00 மணிக்கே தொடங்கி, இரவு 8:00 மணிக்கு பதிலாக இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்படும்.

முனைய நிலையங்களிலிருந்து (Terminal Stations) புறப்படும் கடைசி மெட்ரோ இரயில் நேரம்

(06.11.2026):

பச்சை மற்றும் நீல வழித்தடத்தில்: வழக்கமான இரவு 11:00 மணிக்கு பதிலாக, நள்ளிரவு 12:00 மணி வரை இயங்கும்.

மஞ்சள் வழித்தடத்தில்: வழக்கமான இரவு 9:00 மணிக்கு பதிலாக, இரவு 11:00 மணி வரை இயங்கும்.

மேற்கண்ட மாற்றையமைக்கப்பட்ட அட்டவணை நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று அறிவித்துள்ளது.

பயணிகள் இதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு, சென்னை மெட்ரோவுடன் பாதுகாப்பான, வசதியான மற்றும் தடையற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

என்று தெரிவித்துள்ளது.

X