

இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்.
மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
மண்ணின் மானம் காத்த மருதிருவருக்கு மானமிகு வீரவணக்கம்!
புறநானூற்றுத் தமிழர் வீரத்துக்கு இலக்கணமாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்று போர் புரிந்த சிவகங்கைச் சீமையின் சீற்றமிகு காளைகள் பெரிய மருது அவர்களும் சின்ன மருது அவர்களும்.
இந்தியர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராடினால் அந்நியர் ஆட்சியை அடியோடு அகற்றிடலாம் என அனைவருக்கும் முன்பே 'ஜம்புத்தீவு பிரகடனம்' வழியாக முழங்கிய சமூக நல்லிணக்க வீரர்கள் மருது சகோதரர்கள்.
உயிரைத் தியாகம் செய்து விடுதலை உணர்வை விதைத்த அந்தப் போராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.