தி.மு.க.வில் 110 புதிய மாவட்டங்கள் பட்டியல்- விரைவில் வெளியிட திட்டம்

உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும், நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்​கல் ஏற்​படும் என்று கட்​சி தலைமைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.
திமுக
திமுக
Published on
Summary

110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்​டசபை தேர்​தலில் தி​.மு.க. தோல்வி அடைந்தது. இதையடுத்து தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய உண்மை கண்டறி​யும் குழு அமைக்​கப்​பட்டது. அந்த குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்​படை​யில் சமீபத்​தில் தி.மு.க. செயற்குழு கூட்​டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

பட்டியல் தயார்

இந்த கூட்டத்தில் 9 தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. அதில் ‘தி.மு.க. மாவட்​டங்​களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படும்’ என்​ற தீர்மானமும் அடங்கும். அதன் தொடர்ச்சியாக தி.மு.க. கட்சி தலைமை 110 மாவட்​டங்​கள் அடங்கிய பட்​டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

தற்போது 110 புதிய மாவட்டங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பட்டியலை கட்சி தலைமை விரை​வில் வெளி​யிட உள்ள​தாக தகவல் வெளியாகி​ உள்ளது.

இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறிய​தாவது:-

மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை

தி.மு.க. செயற்​குழு கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்மானங்களின் அடிப்​படை​யில் 110 மாவட்​டங்​கள் குறித்த பட்டியல் தயாரித்து முடிக்​கப்​பட்​டு​விட்​டது. அந்த மாவட்டங்களுக்கு உட்​கட்​சி தேர்​தல் அடிப்​படை​யில் புதிய நிர்வாகி​கள் நியமனம் செய்​யப்​படு​வார்​கள். இதற்கு வசதி​யாக முதற்​கட்​ட​மாக ஒவ்​வொரு மாவட்​டத்​துக்​கும் ஒரு பொறுப்​பாளர் வீதம் புதிய பட்​டியல் தயாரிக்​கப்​பட்​டுள்ளது.

இப்​படி பொறுப்​பாளர்​கள் நியமனம் நடந்​தால், அவர்கள் அடுத்து வரும் உட்​கட்சி தேர்​தலில் மீண்​டும் வெற்​றி​ பெறுவதற்​கான பணிகளை முடுக்கி​ விடு​வார்​கள். அப்​போது உட்​கட்சி தேர்​தல் ஜனநாயக ரீதி​யிலும், நியாய​மான முறை​யிலும் நடப்​ப​தில் சிக்கல் ஏற்​படும் என்று கட்​சி தலைமைக்கு மூத்த நிர்​வாகி​கள் ஆலோ​சனை தெரி​வித்​தனர்.

இதனை ஏற்​றுக்கொண்ட தி.மு.க. தலை​வர் மு.க.ஸ்டா​லின், தற்போது பொறுப்​பாளர்​கள் பட்​டியலை அறிவிக்​கும் முடி​வை தள்ளி வைத்துள்ளார். இதனாலேயே பொறுப்​பாளர்​கள் அறிவிப்பில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. விரை​வில் 110 மாவட்​டங்​கள் குறித்த அதிகாரப்​பூர்வ பட்​டியலை தி.மு.க. தலைமை வெளியிடும்.

இவ்​வாறு அவர்​கள்​ கூறினார்கள்​.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com