

செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சுகள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார்.
போராட்டம் நடத்தியவர்களிடம் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு.
தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு.
செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.