தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக - கனிமொழி

தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குகிறது.
kanimozhi
Published on: 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி சலோ போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு சி.ஜே.பி ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கூறி போராடியவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது.

கைது நடவடிக்கைக்கு கண்டனம்

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.அறவழியில் போராடியவர்களை காவல்துறை கைது செய்ததற்கு கனிமொழி கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக

இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது.

டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக

என்று தெரிவித்துள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com