தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு - சட்டசபையில் அமைச்சர் அருண் ராஜ் அறிவிப்பு

மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
அருண் ராஜ்
அருண் ராஜ்
Published on

மீலாது நபியை முன்னிட்டு நேற்று சட்டமன்றம் நடைபெறவில்லை. ஒரு நாள் விடுமுறையை தொடர்ந்து சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது.

சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

முன்னதாக, சட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

கேள்வி பதில்

பாலங்கள்

வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து பாலாறு பாலம் வரை உயர்மட்ட பாலம் கட்ட அரசு ஆவணம் செய்யுமா? என்று எம்.எல்.ஏ. சுதாகர் கேள்வி எழுப்பினார். சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

கீழ்வேளூர் ரெயில்வே மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பா.ம.க. எம்எல்ஏ லதா கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளதால் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுமா? என்று உறுப்பினர் மாரிமுத்து எழுப்பிய கேள்விக்கு, மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து தண்டவாளத்தை கடந்து செல்வதால் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

தாம்பரம்-செங்கல்பட்டு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை, கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது.

மேம்பாலம் குறித்து இன்றைய அரசின் தற்போதைய சூழ்நிலை என்ன? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, செங்கல்பட்டு முதல் சென்னை வரை போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளதால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை- கன்னியாகுமரி 8 வழிச்சாலைக்கான பணிகளை தொடங்கியுள்ளோம், திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.

செஞ்சி அரசு மருத்துவமனை

செஞ்சி அரசு மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட கூடுதல் நவீன உபகரணங்கள் வழங்கப்படுமா? என பா.ம.க. எம்எல்ஏ கணேஷ் குமார் எழுப்பிய கேள்விக்கு, ஆய்வு செய்து தேவைப்பட்டால் கூடுதலாக வழங்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

கும்மிடிப்பூண்டிஅரசு மருத்துவமனை

கும்மிடிப்பூண்டியில் அரசு மருத்துவமனைக்கு டயாலிசஸ் செய்வதற்கான கருவி கூடுதலாக வழங்க வேண்டும் என எம்எல்ஏ விஜயகுமார் கோரிக்கை விடுத்தார். அதற்கு அமைச்சர் அருண்ராஜ், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் டயாலிசஸ் கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

சட்டசபை நிகழ்வுக்கு பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்படும். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com