பா.ஜ.க கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. போட்டி? குக்கர் சின்னத்துடன் ஆதரவு திரட்டும் நிர்வாகிகள்

முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. போட்டி? குக்கர் சின்னத்துடன் ஆதரவு திரட்டும் நிர்வாகிகள்
Published on

பாராளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி கள் கூட்டணிகளை உறுதிப் படுத்துவதிலும் தொகுதி பங்கீட்டிலும் அதிக தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்க தமிழக அரசியல் கட்சிகள் அதிக அக்கறை காட்டி வருகிறது.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பா.ஜனதா கூட்டணியில் இந்த தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பா.ஜனதா கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளரை நிறுத்தும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தினகரனே போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பும் மேலோங்கி உள்ளது.

சிவகங்கை தொகுதியை பொருத்தவரை முக்குலத்தோர் அதிகம் உள்ள தொகுதியாகும். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. தனித்து போட்டியிட்டு ஒரு லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்றது. தற்போது பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதாலும், முக்குலத்தோர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதாலும் அ.ம.மு.க.வுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என்று கட்சி தலைமை கணக்கு போட்டுள்ளது.

அதன் காரணமாக இப் போதிலிருந்தே தொகுதி முழுவதும் அ.ம.மு.க.வினர் குக்கர் சின்னத்தை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் அனைத்து பகுதிகளிலும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவகங்கை தொகுதியை பொருத்தவரை தி.மு.க-காங்கிரஸ் கூட்ட ணியில் கார்த்தி சிதம்பரத்திற்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? அதுபோல பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் பா.ஜனதா சார்பில் களம் இறக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட் டுள்ள நிலையில் அ.ம.மு.க. இந்த தொகுதியில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com