காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை - சட்டசபையில் முதலமைச்சர் விஜய் உறுதி

பொதுமக்களின் நம்பிக்கை பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை.
விஜய்
விஜய்
Published on
Summary

காவல் மரணங்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசி வருகிறார். அப்போது, காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆவேசமாக பேசியதாவது,

"சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது காவல் மரணங்கள் குறித்து பேசினர்.

காவல் நிலையத்தில் ஓர் உயிரிழப்பு ஏற்படுவது என்பது சாதாரணமான ஒரு நிகழ்வு அல்ல. அது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினை.

எனவே காவலில் எந்த ஒரு மரணம் ஏற்பட்டாலும் அதன் காரணம் குறித்து வெளிப்படையான பாரபட்சமற்ற மற்றும் சட்டப்படி உரிய விசாரணை மேற்கோள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி காவல் மரணம் தொடர்பான தகவல்கள் உரிய காலத்திற்குள் தெரிவிக்கப்படுவதோடு தேவையான மருத்துவ உடற்கூறாய்வு மற்றும் மாஜிஸ்த்ரேட் விசாரணையும் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு காவலர் தவறு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. தவறு செய்தவர் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையை சரிவர செய்து வருகிறது. 

காவல் நிலைய மரணங்களை முற்றிலும் தவிர்க்க கண்காணிப்பு, பயிற்சி, மருத்துவ பரிசோதனை, தொழில்நுட்ப கண்காணிப்பு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது." என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com