

பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி, புகார் கொடுக்க வந்தவரை சராமாரியாக தாக்கியது என தமிழ்நாட்டில் த.வெ.க. எம்.எல்.ஏக்களின் செயல்கள் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன.
குறிப்பாக, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அருள் விக்னேஷின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர்மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையையும் எடுக்கவில்லை தவெக தலைமை.
த.வெ.க.வின் கூட்டணி கட்சியான காங்கிஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரை தவிர, பல அரசியல் தலைவர்கள் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதுவரை த.வெ.க. தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் இடத்தில் தான் இருந்திருந்தால், அருள் விக்னேஷை என்கவுன்ட்டர் செய்திருப்பேன் என ஆவேசமாக பேசியுள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
சென்னை ரிப்பன் மாளிகையில், வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்த வரைவு பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்.,
“தவெகவினருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அது தெரிந்தால்தானே வாக்காளர் பட்டியல் கூட்டத்தில் பங்கேற்பார்கள். அன்பில் மகேஷ் தாராளமாக ஒரு வருடம் கூட சிறையில் இருக்காலம். என்னை பொருத்தவரை ஊழல் செய்த அனைவரையும் சிறையில் அடைக்கலாம். அதனை நான் வரவேற்பேன்.
முரசு புயலில் சிக்கிய காசிமேடு மீனவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்கவேண்டும். கரூர் துயரத்திற்கு கொடுக்கும்போது, இதற்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும்.
வழக்கமாக தீபாவளிக்கு விஜய்யின் படம் வெளியாகும். இந்த வருடம் அது இல்லை என்பதால், த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் புதுப்புது படங்களை வெளியிட்டு வருகின்றனர். நாடு சுடுகாடாக போனாலும் விஜய்க்கு கவலையில்லை.
முதலமைச்சர் எம்.எல்.ஏக்களை கண்டிக்காமல், அழைத்து சாப்பாடு போட்டி, தீபாவளி பரிசு கொடுத்து அனுப்புகிறார்.
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை. அவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பும் அளவிற்கு இவர்களுக்கு துணிவு இருக்கிறது. ஒரு மாற்றுத்திறனாளியை அடித்து, உதைத்த துணை சபாநாயகர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
ஆட்சியர் வீட்டிற்கு குடித்துவிட்டு சென்று கலாட்டா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மாவட்ட ஆட்சியரும் இதை மறுக்கவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடத்தில் நான் இருந்திருந்தால், என்கவுன்ட்டர் செய்திருப்பேன். சுட்டுத்தள்ளியிருப்பேன்; கட்டிப்போட்டு இருப்பேன். அடித்து, துவைத்து, உதைத்து, சுட்டு தள்ளவேண்டும்.
ஆட்சியர் முதல் அடித்தட்டு மக்கள்வரை யாருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை” என தெரிவித்தார்.