நான் பாஜகவில் இணைவதாக சொல்பவனை செருப்பால அடிப்பேன்: திருநாவுகரசர் எம்.பி

அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்
நான் பாஜகவில் இணைவதாக சொல்பவனை செருப்பால அடிப்பேன்: திருநாவுகரசர் எம்.பி
Published on

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எம்.பி திருநாவுக்கரசர்.

அப்போது, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தால் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என்று பாஜகவினர் சொல்கிறார்கள் அதன் வரிசையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக உங்களது பெயரையும் சொல்கிறார்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "அப்படி சொல்பவர்களை செருப்பால அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசலாம் என்று முடிவெடுத்து விட்டேன் என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் அளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வரும் போது எல்லாம் மறைந்த தலைவர்களை பாராட்டி பேசி வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எம்ஜிஆர் அவர்களை பாராட்டி பேசியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "அதிமுகவை பாஜக கூட்டணிக்குள் இழுப்பதற்காகவும், அதிமுக வாக்குவங்கியை தன்பக்கம் இழுப்பதற்கும் தான் பிரதமர் அவ்வாறு பேசி வருகிறார்" என அவர் பேசியுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com