புறமுதுகிட்டு ஓடிவிட்டு பெருந்துயரத்தை சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ? - கரூர் சம்பவம் குறித்து டிடிவி தினகரன் கேள்வி!

சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
புறமுதுகிட்டு ஓடிவிட்டு, பெருந்துயரத்தை சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ? - கரூர் சம்பவம் குறித்து டிடிவி தினகரன் கேள்வி!
Published on: 

கரூர் துயரம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி, குழந்தை உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இன்றோடு இந்த கரூர் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி தவெக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் விஜய்யும் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வெறும் நினைவு மட்டும் போதாது; நீதியும், உண்மையும் வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

“கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தலைவர் ஜோசப் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிர்கள் பறிபோன முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு...

என் நெஞ்சில் குடியிருக்கும் என தனது பேச்சைத் தொடங்கும் தவெக தலைவர் ஜோசப் விஜய், தன்னை பார்க்க வந்து கூட்ட நெரிசலில் சிக்கி கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தார்மீக பொறுப்பேற்காமல் புறமுதுகிட்டு ஓடிவிட்டு தற்போது அப்பெருந்துயரத்தை ஒரு சமூக வலைத்தள பதிவிற்குள் சுருக்க நினைப்பது எவ்வளவு பெரிய அநியாயம் ?

உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிவாரணமும், பணிப்பலன்களும் மட்டுமே தீர்வாக அமையாது என்பதோடு, தமிழ்நாடு மக்களின் மனங்களில் அழியாத ரணமாக பதிந்திருக்கும் பெருந்துயரம் தொடர்பாக சி.பி.ஐ மேற்கொள்ளும் விசாரணையை விரைவுபடுத்தி அதற்கு காரணமானவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதே உயிரிழந்த 41 பேருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com