காட்பாடி அருகே மின்னழுத்தம் காரணமாக வக்கீல் வீட்டில் தீ விபத்து

தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி அருகே மின்னழுத்தம் காரணமாக வக்கீல் வீட்டில் தீ விபத்து
Published on: 

காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் வஞ்சுநாதன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது52). இவர் வக்கீல் மற்றும் ஆடிட்டராக வேலை செய்து வருகிறார். இவரது வீட்டிற்கு மும்முனை மின்சார இணைப்பு பெறப்பட்டுள்ளது.

தீ விபத்து

இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மின் அழுத்தம் காரணமாக மின் கசிவு ஏற்பட்டது. அப்போது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள், 1 சைக்கிள் ஆகியவை தீப்பிடித்து எறிய தொடங்கியது.

பின்னர் தீ மளமள வீட்டிற்குள் பரவியது. இதனை பார்த்த பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர். அதற்குள் வீட்டில் இருந்த டி.வி, பிரிட்ஜ், ஏ.சி, கதவு ஜன்னல்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து காட்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மின் இணைப்பை துண்டித்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வீட்டில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com