நீலகிரியில் 6 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோவையில், கனமழை பெய்து வரும் நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவு
School closed
Published on: 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை கணிசமாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

நீலகிரி

இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை

கோவையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்து வரும் நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com