ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வழக்கு: மு.க.ஸ்டாலினுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்!

செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Adhav Arjuna - MK Stalin
Published on
Summary

திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்தார். இதற்கு செப்.15க்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், " தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் செயல்படக் கூடிய திமுக ஐடி விங்க் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந்தேதி ஒரு பதிவை வெளியாகியுள்ளது.

அதில் "அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பின்படி சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்புலான போதை பொருள் கடத்தலில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ தற்போது த.வெ.க அரசின் சிறு தொழில் முகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது" என்று கூறியுள்ளது.

வைரல் பதிவு

இந்தப் பதிவு வெளியிட்டு இரண்டு நாட்களில் சுமார் 2 லட்சத்து 67 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். அந்த பதிவை 2,600 பேர் மறு பதிவு செய்துள்ளனர் 4,400 பேர் விருப்பம் (லைக்) தெரிவித்துள்ளனர். 150 பேர் பதிலும் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பதிவு மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தான் இந்த சமூக வலைதள கணக்கை பராமரித்து வருகின்றது. எனவே இந்த பதிவுக்கு மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பு.

இழப்பீடு கோரிக்கை

இந்த ஜான் பிரிட்டோ எனக்கு உறவினர் இல்லை. மேலும் பி.ஜான் பிட்டோ என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து, அமலாக்கத்துறை சொல்லும் ஜான் பிட்டோ நான் இல்லை என்றும் கூறியுள்ளார்.

எனவே அவதூறு பதிவை வெளியிட்டதற்காக திமுக ஐடி விங் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும்.

அந்த பதிவையும் சமூக வலைதளத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நோட்டீஸ் உத்தரவு

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம் ஆஜராகி வாதிட்டார்.

இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு வருகிற செப்டம்பர் 15-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொடர்பு குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com