

எழும்பூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், புரசைவாக்கம் , சென்னை சென்டிரல், கிண்டி, வில்லிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
மழை காரணமாக அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.