இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற வேண்டும்.!- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை முன்பு தவம் கிடக்கும் அதிமுக தொண்டர்கள்

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார்.
ADMK Office
Published on: 

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகத்தில் 86.26 சதவீதம், தாராபுரத்தில் 80.30 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் முன்னிலை வகித்து வருகிறது.

தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி முன்னிலை வகித்து வந்தார்.

தாராபுரத்தில் த.வெ.கவை பின்னுக்கு தள்ளி அ.தி.மு.க வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை வகித்து வருகிறார்.

இதற்கிடையே, தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் அதிமுக வெற்றிப்பெற வேண்டி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை முன் அதிமுக தொண்டர்கள் வணங்கி வேண்டிக்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com