ஆளை மாற்றுவதைவிட சுய பரிசோதனை முக்கியம்- மு.க.ஸ்டாலின்

மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.
MK Stalin
Published on

திமுக செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாம் பார்க்காத வெற்றியும் இல்லை.. தோல்வியும் இல்லை. அமைப்பு முறையில் முக்கியமான பெரிய மாற்றங்களை செய்ய உள்ளோம்.

திமுக வலுமையாக இருக்க காரணம் அமைப்பு முறை தான். நமது தவறுகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஆளை மாற்றுவதைவிட முழுமையான சுய பரிசோதனை முக்கியம்.

மாற்றம் சிலருக்கு கசப்பாக இருக்கலாம், கசப்பு தான் உடலுக்கு பலம் தரும்.

ஊருக்கே வெளிச்சம் விளக்கிற்கு அதன் கீழ் இருக்கும் இருட்டு தெரியாது.

புதுமுகங்களுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வரப்படும். தனக்கு இணையாக யாரும் இருக்க கூடாது என எண்ணுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com