சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - தொழிலாளி உயிரிழப்பு

அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Firecracker factory explosion
Published on
Summary

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் உள்ள சின்னதம்பி பட்டாசு ஆலையில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்பதாலும் வெடித்து சிதறுவதாலும் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிவிபத்தில் தொழிலாளி மாடசாமி என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 3-ந்தேதி பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com