விஜய் என்ன தெய்வப் பிறவியா?- ஜெயக்குமார்

புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது.
விஜய் என்ன தெய்வப் பிறவியா?- ஜெயக்குமார்
Published on

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியிருப்பதாவது:-

நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. அதாவது புரட்சித் தலைவர் மாதிரி இனியாரும் பிறக்க முடியாது. அவர் தெய்வப் பிறவி. அந்த தெய்வப் பிறவி மாதிரி விஜயை சித்தரித்து விட்டார்கள். 

அவர்கள் தலைவர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது சிவாஜி கணேசன் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது தியாகராஜ பாகவதர் மாதிரி சித்தரித்து கொள்ளட்டும் அல்லது பி.யூ. சின்னப்பா மாதிரி சித்தரித்து கொள்ளட்டும்.

எங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை. அதனால் புரட்சித் தலைவர் ஆரம்பித்த கட்சி என்பது தி.மு.க.-வை எதிர்த்து தொடங்கப்பட்டது.

அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். 50 ஆண்டுகள் கடந்தும் எழுச்சியாக உள்ளது. அதற்கு எம்.ஜி.ஆர். போட்ட விதை. அது இன்று ஆலமரமாக வளர்ந்து பலபேருக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது.

அதனால் அ.தி.மு.க.-வை எந்த இயக்கத்துடனும் ஒப்பிடமுடியாது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com