கைதிகள் தப்பியோட்டம்: தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சிறைச்சாலையிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது
premalatha vijayakanth
Published on: 

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நாடகமாடி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த நிலையில் கிளைச் சிறையில் இருந்து சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு, தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தேனி சிறையில் இருந்து சிறைக்காவல்ர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறைச்சவையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தப்பிச் செல்லும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிறைச்சாலைகள் என்பது குற்றவாளிகளைச் சட்டப்படி விசாரித்து, தண்டனை வழங்கும் ஒரு இடமாகும்.

பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குறைப்பாடு

அத்தகைய சிறைச்சாலையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் என்பது சாதாரணமான ஒன்றல்ல. இது சிறைத்துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய குறைபாட்டைவே வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது சிறைச்சாலையிலேயே இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பயத்தையும் மற்படுத்தியுள்ளது. 17 கைதிகள் எவ்வாறு தப்பிச் சென்றார்கள்? சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருத்த அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?.

தப்பியோடிய கைதிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்வதற்குத் தமிழக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பகுதிகளில் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, பாதுகாப்பு குறைபாடுகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பதைத் தெளிவுபடுத்தி, தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறைச்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாத வகையில் தேவையன உடனடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே, சிறைச்சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இந்த நிகழ்வு கைதிகளுக்கு ஒரு முன் உதாரணமாக அமைந்துவிடக்கூடாது. சிறை பாதுகாப்பை கடுமையான நடவடிக்கை மூலம் உறுதி செய்ய வேண்டும். தமிழக அரசு இச்சம்பவத்தை அலட்சியமாகக் கருதாமல், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com