மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ்

இடைத்தேர்தல் நடந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அனைத்து நடத்தை விதிகளும் விலக்கி கொள்ளப்பட்டன.
madurantakam and dharapuram
Published on: 
Summary

தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் இன்று வாபஸ் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தேதி கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் அதே நாளில் தொடங்கப்பட்டது.

நடத்தை விதிமுறைகள்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனால் அரசின் திட்டங்கள் அந்த 2 தொகுதிகளுக்கும் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது. எந்தவித நலத்திட்டங்களும் இரு தொகுதிகளுக்கும் அறிவிக்கப்படவில்லை.

கட்டுப்பாடுகள்

தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்து நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. தேர்தலையொட்டி பறக்கும் படைகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டன. பணம் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணையம்

இந்த நிலையில் தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நடத்தை விதிகள் இன்று வாபஸ் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பறக்கும் படைகள் திரும்ப பெறப்பட்டன. புதிய திட்டங்களை அறிவிக்க அரசுக்கு தடை இல்லை. இன்று முதல் இடைத்தேர்தல் நடந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் அனைத்து நடத்தை விதிகளும் விலக்கி கொள்ளப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com