தாராபுரத்தில் ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்குகள் எவ்வளவு? முழு விவரம்

23 சுற்றுகள் முடிவில் 37.02 சதவீதம் வாக்குகள் பெற்று (66841) பெற்று சத்யபாமா வெற்றி பெற்றார்.
தாராபுரம் இடைத்தேர்தல்
தாராபுரம் இடைத்தேர்தல்
Published on: 

தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாதக, சிபிஐ வேட்பாளர்கள் உள்பட 22 வேட்பாளா்கள் போட்டியிட்டனர். கடந்த 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தபால் வாக்குகள் (1316) உள்பட 1,80,532 வாக்குகள் பதிவாகின.

தபால் வாக்குகள்

இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் தி.மு.க. 613 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தது. அதிமுக 406 வாக்குகளும், தவெக 255 வாக்குகளும் பெற்றன.

முதல் நான்கு சுற்றுவரை அதிமுக முன்னிலை

அதன்படி 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் நான்கு சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னணி பெற்றிருந்தார். அதன்பின் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா தொடர்ந்து முன்னணி பெற்றார்.

தவெக வேட்பாளர் சத்யபாமா வெற்றி

23 சுற்றுகள் முடிவில் 37.02 சதவீதம் வாக்குகள் பெற்று (66841) பெற்று சத்யபாமா வெற்றி பெற்றார். திமுக 31.78 சதவீதம் வாக்குகள் (57370) பெற்று சுகன்யா 2-வது இடம் பிடித்தார். அதிமுக 25.08 வாக்குகள் (45280) பெற்று பானுமதி 3-வது இடம் பிடித்தார்.

நாம் தமிழர் கட்சி 2.92 சதவீதம் வாக்குகள் (5268) பெற்று கார்த்திகா 4-வது இடம் பிடித்தார். 1157 வாக்குகள் பெற்று கம்யூனிஸ்ட் கட்சி 5-வது இடம் பிடித்தது, நோட்டாவுக்கு 677 வாக்குகள் கிடைத்தன.

2026 பொதுத்தேர்தல் முடிவு

2026 பொதுத்தேர்தலில் அதிமுக 81100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. திமுக 64373 வாக்குகள் பெற்று 2-வது இடம் பிடித்தது. தவெக 46438 வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்தது. நாம் தமிழர் கட்சி 6026 வாக்குகள் பெற்றிருந்தது. நோட்டோவுக்கு 1058 வாக்குகள் விழுந்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com