இடைத்தேர்தல் மூலம் வரலாறு திரும்பும் - துரைமுருகன்

2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
Durai Murugan
Published on

எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். மீண்டும் வரலாறு திரும்பும் என்று துரைமுருகன் கூறினார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தொகுதிகளில் தேர்தல் பணிகளையும் தி.மு.க. தொடங்கி உள்ளது. இதுகுறித்து தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. போன முறையும் நின்றோம். இந்த முறையும் நிற்கிறோம். தேர்தல் காலத்தில் வந்து பாருங்கள். தி.மு.க.வின் வியூகத்தை இப்போதே சொல்லி விட்டால் கேள்வித்தாள் அவுட்டான மாதிரி ஆகிவிடும். எம்.ஜி.ஆர். ஆளுங்கட்சியாக இருந்த காலத்திலேயே அண்ணாநகர், மயிலாடுதுறை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மீண்டும் வரலாறு திரும்பும். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது இலக்கணம் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com