

கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
முரசு புயல் வடக்கு ஆந்திரா பகுதியை நெருங்கி வருகிறது. இதனால் சென்னையில் கடல் சீற்றம் அதிகரிக்கும் என கடல் தகவல் சேவைகள் மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.4 மீட்டர் முதல் 2.1 மீட்டர் வரை உயரமாக எழும்பும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. முரசு புயல் அதிதீவிர புயலாக உருவாகி இருக்கிறது. புயல் காரணமாக சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கடந்த 21 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 11 செ.மீ. அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. முக்கியமான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழை காரணமாக சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம் காரணமாக மெரினா கடற்கரைக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பழவேற்காடு கடற்கரைக்கும் மக்கள் போக வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.