DMK | கலைஞர் கருணாநிதியின் சாதனையை சமன் செய்த துரைமுருகன்

தமிழக சட்டசபை தேர்தலில் 13-வது முறையாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் களம் இறங்குகிறார்
துரைமுருகன்
துரைமுருகன்
Published on

தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். திமுக பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

அமைச்சர் துரைமுருகன் 1971-ல் தொடங்கி 2021 வரை 12 முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அதில் 10 முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது 13-வது முறையாக காட்பாடியில் களமிறங்குகிறார். இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலில் 13 முறை போட்டியிட்ட கருணாநிதியின் சாதனையை சமன் செய்துள்ளார் துரைமுருகன். ஆனால், கருணாநிதி 13 முறையும் போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com