திமுக வெளிநடப்பு: எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை குறைக்கூறுவதா?- உதயநிதி ஆவேசம்

சட்டம்-ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை.
Udhayanithi Stalin
Published on

மாணவன் கொலை, பாலியன் வன்கொடுமை, போதைப்பொருள் குறித்து எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை என குற்றம்சாட்டி சட்டமன்றத்தில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாணவர் அமுதன் கொலை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீதான அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

உரிய விளக்கமும் தெளிவான பதிலும் அளிக்காத தவெக அரசு, எல்லாவற்றிக்கும் திமுக ஆட்சியை பற்றி பேசுகிறது.

மாணவர்கள் கொலை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளிக்காமல் எங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

எந்த அமைச்சர்களும் துறை சார்ந்து பதிலளிப்பதில்லை, சட்டம்-ஒழுங்கிற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் சட்டமன்றத்திற்கு வரவில்லை.

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக தவெக அரசு எந்தவிதமான தெளிவான விளக்கமும் அளிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com