

சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு என்று திமுக எம்எல்ஏ எ.வ.வேலு கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு சந்தித்தார்.
மிசா தொடர்பான முதலமைச்சர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி கொடுத்திருந்த மனுவின் நிலை குறித்து அறிய சட்டமன்ற உறுப்பினர்கள் எம்ஆர்கே பன்னீர்செல்வம், ராஜா, எ.வ.வேலு ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர்.
அப்போது, சட்டசபை கூட்டத்தொடரில் உண்மைக்கு மாறாக பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளித்தனர்.
புகார் கடிதம் அளித்த திமுக எம்எல்ஏக்கள் குழு தலைமைச்செயலகம் வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது,
* சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவரை அவதூறாக பேசினர்.
* சட்டசபையில் இல்லாதவர்கள் குறித்து பேசுவது விதிப்படி தவறு.
* மிசா தொடர்பான முதலமைச்சரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி முன்னதாக மனு கொடுத்திருக்கிறோம்.
* உரிமை மீறல் குழு அமைத்துள்ள நிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை குறித்த முடிவு எடுப்பார்கள்.
* தவறான செய்தியை சட்டசபையில் பகிர்ந்து கொண்டது விதிமீறல்.
* இல்லாதது பொல்லாதவற்றை பேசி திசை திருப்பும் அரசியலில் ஈடுபடுகிறது தவெக அமைச்சரவை.
இவ்வாறு அவர் கூறினார்.