திமுக தான் பாஜகவின் மெயின் டீம்- சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டினார்.தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி கேட்டுயுள்ளார்.
திமுக தான் பாஜகவின் மெயின் டீம்- சீமான் விமர்சனம்
Published on

தருமபுரி:

கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தினை தெரிவித்தார்.

உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம்சாட்டிய சீமான், தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாதக, பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com