தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு: திமுகவின் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது- திருமாவளவன்

சங் பரிவார் சதி அரசியலுக்கு வழிவகுப்பதாய் திமுக நிலைப்பாடு உள்ளது.
Thirumavalavan
Published on: 

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விகிதத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்தும் மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பா விளக்கம் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,"தொகுதி மறுவரையறை தமிழக உரிமையை காப்பாற்றியுள்ளோம். உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்கு பார்வையுடன் அணுகினோம். தமிழகத்தின் 7.18 சதவீத பங்களிப்பு தொடர வேண்டும்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பைவிட தொகுதி மறுவரையறையில் திமுக நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும், திமுக நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

திமுக நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து விளைவிக்க கூடியது. ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே ஆட்சி என்ற சங் பரிவார் சதி அரசியலுக்கு வழிவகுப்பதாய் திமுக நிலைப்பாடு உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X