“அந்த சகோதரர் முதுகில் குத்திவிட்டீர்கள் ராகுல்!” – காங்கிரஸை கடுமையாகச் சாடிய தி.மு.க!

நாளை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்குகிறது.
Rahul Gandhi - MK Stalin
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்து, தி.மு.க.-வின் IT Wing தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

DMK IT WING பதிவு என்ன?

இன்று காலை தி.மு.க. ஐ.டி. விங் (@DMKITwing) வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், ராகுல் காந்தியை நேரடியாகக் குறிப்பிட்டுக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.

அந்தப் பதிவில், “அந்தச் சகோதரனைத்தான் நீங்கள் சிறிதும் வெட்கமின்றி முதுகில் குத்திவிட்டீர்கள் மிஸ்டர் ராகுல்” ("AND THAT is the BROTHER you SO Shamelessly Stabbed in the back Mr.Rahul") என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பதிவுடன் தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது மற்றும் நியாயமான தொகுதி மறுவரையறை ஆகிய ஹேஷ்டேக்குகளையும் தி.மு.க. ஐ.டி. விங் பதிவிட்டுள்ளது.

அரசியல் பின்னணி

நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவில், அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீதத் தொகுதிகளை அதிகரிக்கவும், 1971 மக்கள் தொகை அடிப்படையிலான விகிதாச்சாரத்தைத் தக்கவைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகக் கூறி தி.மு.க. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ள நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த நேரடி மோதல் தமிழக மற்றும் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X