திமுகவினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்..!- சோதனை நிறைவுக்கு பிறகு அன்பில் மகேஷ் பேட்டி

காலை 7 மணி முதல் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தரப்பட்டது.
Anbil mahesh
Published on

திருச்சி தென்னூரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

இதைதொடர்ந்து, தென்னூரில் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சந்தேகத்தின் அடிப்படையில் எனது இல்லத்தில் 8 மணி நேரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர்.

காலை 7 மணியளவில் அதிகாரிகள் இல்லத்தில் நுழைந்ததில் இருந்து முடியும் வரை முழு ஒத்துழைப்பு தரப்பட்டது.

எனது வீட்டில் வைத்திருந்த கல்வித்துறை சார்ந்த ஆவணங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றனர்.

புதிய தலைமைச் செயலகம், இடைத்தேர்தல் தொடர்பாக பேசியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற சோதனைகளை டேக் டைவர்ஷன் தவெக அரசு மேற்கொண்டுள்ளது.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் இல்லை நாங்கள், 75 ஆண்டு கால இயக்கம் திமுக.

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, திமுகவினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள்.

எனக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை செய்த அதிகாரிகள் எனக்கு எதிராக செயல்படுமாறு அன்பாக மிரட்டுகின்றனர். இந்த சோதனை உங்களுக்கு இல்லைங்க, அவரை குறிவைத்து தான், அவருக்கு எதிராக சொல்லுங்க என அன்பாக மிரட்டுகிறார்கள்.

18ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் கூறிச்சென்றனர்.

18ம் தேதி காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரான பின்னர் நேரடியாக இடைத்தேர்தல் நடக்கும் தாராபுரத்திற்கு செல்வேன்.

மிசா சட்டம், மு.க.ஸ்டாலின் குறித்து சட்டசபையில் அவதூறாக பேசிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com