முதலமைச்சர் விஜயுடன் டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. சந்திப்பு

தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
CM Vijay
Published on: 
Summary

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி.அஸ்ராகார்க் சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 10-க்கும் அதிகமான படுகொலை சம்பவங்கள் அரங்கேறியதை தொடர்ந்து தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் நேற்று அறிவுறுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ரவுடிகள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி.அஸ்ராகார்க் சந்தித்து பேசினர். அப்போது தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்களை எடுத்து கூறினார்கள். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

X