முதலமைச்சர் விஜய் 20-ந்தேதி திருச்சி பயணம் - அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்

திறப்பு விழா ஏற்பாடுகளை கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குமரவேல் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
CM Vijay
Published on: 
Summary

முதலமைச்சர் விஜய் வருகிற 20-ந் தேதி திருச்சி செல்கிறார். அங்கு ரூ.134 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைக்கிறார்.

ரூ.134 கோடியில் புதிய கட்டிடம்

திருச்சி புத்தூர் மகாத்மாகாந்தி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான கட்டிட வசதிகள் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் 600 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.134 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு இதனை திறந்து வைக்க உள்ளார்.

துணை கமிஷனர் ஆய்வு

திறப்பு விழா ஏற்பாடுகளை கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குமரவேல் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் அரவிந்த் பனாவத் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.

X