எண்ணூர் - கடலூர் இடையே கரையை கடக்கும் அக்வான் புயல்?

நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் அக்வான் புயல் நகராமல் ஒரே இடத்தில் நிற்கும்.
தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
Published on: 

மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். நவம்பர் 16-ந்தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக்கடலில் அக்வான் புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியிருப்பதாவது:

* வங்கக்கடலில் உருவாகும் அக்வான் புயல் தமிழகத்தில் கரையை கடக்கும்.

* எண்ணூர் - கடலூர் இடையே கரையை கடக்க 80% வாய்ப்பு உள்ளது.

* தமிழ்நாட்டிற்கு மழைப்பொழிவு தரும் புயலாக அக்வான் அமையும்.

* நவம்வர் 16, 17 ஆகிய தேதிகளில் அக்வான் புயல் நகராமல் ஒரே இடத்தில் நிற்கும். நவ. 19-ந்தேதி இரவு அல்லது 20-ந்தேதி அதிகாலை தீவிரப்புயலாக அக்வான் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

* மீனவர்கள் 20-ந்தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்

* இந்த புயல் சின்ன தீவிர புயலாக வலுப்பெற்றாலும் நல்ல மழைப்பொழிவை தரும். காற்று பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்.

X