

நவம்பர் 16-ந்தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக்கடலில் அக்வான் புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.
நவம்பர் 16-ந்தேதி மாலை வாக்கில் மத்திய வங்கக்கடலில் அக்வான் புயலாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.