

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி வருகின்றனர்.
நவம்பர் 28 அன்று நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய வரைவு மசோதாவில் திமுகவின் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளதால் மசோதாவிற்கு ஆதரவு என திமுக தெரிவித்துள்ளது.
ஆனால், திமுக தனது முடிவை மறுபரிசீலனை சேய்யவேண்டும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூடும் நிலையில், மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்கிறது. இந்நிலையில் திமுக முடிவை மாற்றவேண்டும் என வலியுறுத்த அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் இந்தியா கூட்டணியின் தலைவர்.
பேச்சுவார்த்தைக்கு வந்த மல்லிகார்ஜூனே, சோனியா காந்தி, ராகுல், மம்தா உள்ளிட்டோரை வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் மு.க.ஸ்டாலின்.
பேச்சுவார்த்தையில் சோனியா காந்தி, மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல், டி.கே.சிவகுமார், வி.டி.சதீஷன், ரேவந்த் ரெட்டி, எம்.பேபி, வேணுகோபால், கபில் சிபல், மம்தா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பேச்சுவார்த்தை முடிந்தபின், திமுக நிலைப்பாடு உறுதியானதா அல்லது கோரிக்கையை ஏற்று மாற்றப்படுமா என்பது தெரியவரும்.