

தமிழ்நாட்டில் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தைக்கும் 365 நாட்கள் (ஓராண்டு) ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் இன்று தமிழக முதலமைச்சர் விஜய், அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் தொகுதிகளில் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் கார் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கும் தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன். அதேவேளையில், தந்தையர்களுக்கும் தந்தைமை விடுப்பு (paternity leave) வழங்கப்பட வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் சுமை பெண்களின் மீது மட்டுமே இருக்கக்கூடாது. ஆண்களும் அந்த பொறுப்பை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆனால், குடும்பத்தின் அளவை அதிகரிக்க முனையும் அல்லது மூன்றாவது குழந்தையை பெற ஊக்குவிக்கும் எந்தவொரு சலுகையையோ அல்லது அரசுத் திட்டத்தையோ நான் முழுமையாக எதிர்க்கிறேன். நமக்கு ஆரோக்கியமான மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற மக்கள் தொகைதான் தேவை.
வெறும் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட மக்கள் தொகை நமக்கு தேவையில்லை. தொழில்நுட்பம் சார்ந்த இந்த உலகில் பெரிய குடும்பங்கள் தேவை என்று நான் கருதவில்லை. சிறிய, ஆரோக்கியமான மற்றும் அதிகக் கல்வி அறிவு பெற்ற மக்கள் தொகையே போதுமானது
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
தமிழக அரசு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு வாகனங்களை வழங்குவது குறித்த கேள்விக்கு, "எம்.பி.க்கள் கார்கள் கேட்கவில்லை என்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்றார்.