வெள்ளி பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் விஜய்

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது.
Elavenil Valarivan - CM Vijay
Published on
Summary

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம்பெற்றதோடு, தனிநபர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இந்திய வீராங்கனைகளின் இச்சாதனைகள் பாராட்டுக்குரியது. இது இளம் தலைமுறையினருக்கு இலக்கை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் களமிறங்கி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது.

இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள விளையாட்டு வீராங்கனைகளின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com