ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி - 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி

ருத்ராங்க்‌ஷ் 631.8 புள்ளிகளுடன் தனிநபர் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Indian men’s 10m air rifle
Published on
Summary

ஜப்பானில் நடந்து வரும் 2026-ஆம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா தனது மூன்றாவது வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது.

ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் 2026 ஆசிய விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆசியாவை சேர்ந்த 45 நாடுகளின் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

முதல் நாள் போட்டி

முதல் நாளில் நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில், இளவேனில் வாலரிவன், சோனம் உத்தம் மாஸ்கர் மற்றும் விதர்சா கே. வினோத் ஆகிய மூவர் குழு கொண்ட அணி, வெள்ளி பதக்கத்தை வென்றது.

இதையடுத்து நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வலரிவன் தனது இரண்டாவது வெள்ளி பதக்கத்தை வென்றார்.

ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டி

இந்த நிலையில் இன்று காலை நடைபெற்ற ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில், இந்தியாவை சேர்ந்த ருத்ராங்க்‌ஷ் பாட்டீல், ஹிமான்ஷூ தில்லன் மறும் பார்த் மானே ஆகிய மூவர் அணி 1890.1 என்ற புள்ளிகளுடன் வெள்ளி பதக்கத்தை வென்றது.

ருத்ராங்க்‌ஷ் 631.8 புள்ளிகளுடன் தனிநபர் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், அதேசமயம் ஹிமான்ஷு 630.0 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தைப் பிடித்தார்.

மறுபுறம், பார்த்த் 628.3 புள்ளிகளுடன் 10வது இடத்தைப் பிடித்ததால், தனிநபர் இறுதிப் போட்டியில் இடம் பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இந்த போட்டியில் சீனாவை சேர்ந்த வீரர்கள், 1899.0 என்ற புள்ளியுடன் தங்க பதக்கத்தை வென்று உலக சாதனையை முறியடித்தனர்.

மேலும் இந்த போட்டியில் தென் கொரியா மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com