சென்னை வந்த பிரதமர் மோடி: பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு

ரோட்டின் இருபுறமும் பா.ஜ.க.வி னர் கட்சி கொடிகளுடன் திரண்டு நின்று பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
pm modi
Published on: 
Summary

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 4-வது வழித்தடத்தின் ஒரு பகுதியான பூந்தமல்லி-வடபழனி இடையிலான 14.64 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்துள்ளன. ரூ4,900 கோடி மதிப்பில் நிறைவடைந்த இந்தப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

சென்னை வருகை

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை கவர்னர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், அமைச்சர் என்.ஆனந்த், தலைமை செயலாளர் சாய்குமார், போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

ரோடு ஷோ

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி காரில் போரூருக்குப் புறப்பட்டார். விமான நிலையம் முன்பிருந்து பரங்கிமலை ராணுவ பயிற்சி வளாகம் வரை அவர் ‘ரோடுஷோ’ சென்றார். அப்போது ரோட்டின் இருபுறமும் ஏராளமான பா.ஜ.க.வி னர் கட்சி கொடிகளுடன் திரண்டு நின்று பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கை அசைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com