காவிரி முதல் நீட் வரை... தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்

மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்
மாநாட்டில் பேசிய முதலமைச்சர் விஜய்
Published on

12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில், வலுவான மாநிலங்கள்- வலுவான இந்தியா என கூட்டாட்சி தத்துவத்தை குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். மேலும் அவர் பேசுகையில்,

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தென் மாநிலங்கள் தான் முக்கிய பங்களிப்பு தரும் இயந்திரம்.

* இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தென் மாநிலங்கள் மட்டும் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன.

* காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகள் மதிக்கப்பட வேண்டும்.

* காவிரி மேலாண்மை ஆணைய முடிவுகளை செயல்படுத்த வேண்டும்.

* மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக தென் மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கக்கூடாது.

* தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்காது என்ற சட்டபூர்வ உறுதிமொழி தேவை.

* கடல்வழிப் போக்குவரத்து, மீன்பிடித்தலில் அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படுவோம்.

* மாநிலங்களுக்கு இடையேயான உளவுத் தகவல்களை பகிர்வதன் மூலம் போதைப்பொருளை ஒழிப்போம்.

* போதைப்பொருள்களின் ஆன்லைன் விற்பனையை தடுக்க சட்ட விதிகளை கடுமையாக்க வேண்டும்.

* போதைப்பொருள் தடுப்பில் மாநிலங்கள் இணைந்த வலையமைப்பை உருவாக்க வேண்டும்.

* 12-ம் வகுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடத்த அனுமதி வழங்க வேண்டும். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

* முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நீதித்துறை உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பரஸ்பர நம்பிக்கை, அறிவியல் ஆதாரங்கள், சட்டத்தின் மீதான மதிப்போடு நதிநீர் பிரச்சனையை அணுக வேண்டும்.

* கர்நாடகாவின் பொம்மசந்திரா முதல் தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரெயில் நீட்டிக்க வேண்டும்.

* வரி விகித நிர்ணயத்தில் மாநிலங்களுக்கான நெகிழ்வுத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.

* சிறப்பு சலுகை கேட்கவில்லை, நியாயமான மற்றும் சமமான அணுகுமுறையையே கேட்கிறோம் என்று பேசியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com