வ.உ.சிதம்பரனாரின் இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் வீரவணக்கங்கள்! - முதலமைச்சர் விஜய்

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார்.
வ.உ.சிதம்பரனார் - முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 90-வது நினைவு நாளாகும். வ.உ.சி. நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்திலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசிக் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கியவருமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில் அவரது இணையற்ற தியாகத்திற்கும், நாட்டுப்பற்றிற்கும் எனது வீரவணக்கங்கள்!

தாய்நாட்டின் விடுதலைக்காகவே தனது சொத்துகளையெல்லாம் இழந்து, சிறைக் கொடுமைகளை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் துணிச்சலும், தன்மானமும், தமிழ் மொழி மற்றும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றும், தொழிலாளர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் என்றும் நமக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும்.

சுதேசி உணர்வையும், சுயசார்பு சிந்தனையையும், நாட்டுப்பற்றையும் மக்கள் மனங்களில் விதைத்த வ.உ.சிதம்பரனார் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X