அண்ணன் சீர் திட்டம்: தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு

திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.
annan seer thittam
Published on: 

அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் வின்ணப்பிக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

அண்ணன் சீர் திட்டம்

தமிழக முதலமைச்சர்விஜய் தலைமையிலான அரசு, தகுதியுடைய மணப்பெண்களுக்கு 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது

2026-27 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்காக, முதற்கட்டமாக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் திட்டத்திற்கான தகுதி மற்றும் விண்ண்பிக்கும் வழிமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்க்கப்பட்டுள்ளதாவது

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம்.5.10.2026 ប្រល់ 15.01.2027 திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்கலாம்.அரசு இ-சேவை மையங்கள் அல்லது www.tnesevai.tn.gov.in @ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும்.மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும்.திருமண நிதியுதவிக்கான பிற அரசுத் திட்டங்களில் பயன் பெறாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களுக்கான செயல்முறை

விண்ணப்பதாரரின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் தகுதி சரிபார்க்கப்படும்.தகுதியுடைய விண்ணப்பதாரர் திருமண பத்திரிகையை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தகுதியான ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தனித்துவ அடையாள எண் வழங்கப்படும்.விண்ணப்ப நிலை குறித்து குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள், திருமணத்தைத் தமிழ்நாட்டில் பதிவு செய்ய வேண்டும்.

தகுதி இல்லாத காரணத்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்படும்.

என்று தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

X